கலர் கோழி குஞ்சுகள் விற்பனை
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, சந்தைப்பேட்டை அருகில் கலர் கோழி குஞ்சுகள் விற்பனை நடந்தது.தர்மபுரி, கிருஷ்ணகிரி நகரங்களில் கோழி குஞ்சுகள், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிந்தலவாடி, கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம் பகுதிகளில் விவசாயிகள் வீடுகளில் வளர்க்கும் வகையில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கலர் கோழி குஞ்சு ஒன்று, 10 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கலர் கோழி குஞ்சுகளை வீடுகளில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும்.