உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஒரே நேரத்தில் குவிந்த காங்.,-பா.ஜ.,வினர்:கரூர் அரசு மருத்துவமனையில் நெரிசல்

ஒரே நேரத்தில் குவிந்த காங்.,-பா.ஜ.,வினர்:கரூர் அரசு மருத்துவமனையில் நெரிசல்

கரூர்:கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று ஒரே நேரத்தில் காங்., - பா.ஜ., குழுவினர் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 27ம் தேதி நடந்த த.வெ.க., பொதுக்கூட்டத்தில் சிக்கி, மூச்சுத் திணறி, 41 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் நாள்தோறும் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று மதியம் அகில இந்திய காங்., கட்சி பொதுச்செயலர் வேணு கோபால் தலைமையில் ஒரு குழுவும், பா.ஜ., எம்.பி.,ேஹமமாலினி தலைமையிலான ஒரு குழுவும், ஒரே நேரத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தனர்.அப்போது அவர்களுடன், 100க்கும் மேற்பட்ட கார்களில் கட்சியினர் வந்தனர். இதனால், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை, பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஒழுங்குப்படுத்தினர். மேலும், மருத்துவமனைக்கு வந்த, உள்புற நோயாளிகளின் உறவினர்கள், வெளிப்புற நோயாளிகள் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை