உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கான்கிரீட் சாலை அமைக்க பணி துவக்கம்

கான்கிரீட் சாலை அமைக்க பணி துவக்கம்

நல்லம்பள்ளி: தேங்கமரத்துப்பட்டியில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., தேங்காமரத்துபட்டியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் சோனியாகாந்தி வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில், தர்மபுரி, பா.ம.க, - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு, புதிய கான்கிரீட் சாலை பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நல்லம்பள்ளி பி.டி.ஓ., லோகநாதன், கூட்டுறவு வங்கி செயலாளர் அன்பழகன், பா.ம.க., நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை