பழைய ஜெயங்கொண்டத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி
பழைய ஜெயங்கொண்டத்தில்குடிநீர் குழாய் அமைக்கும் பணிகிருஷ்ணராயபுரம், அக். 20-பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், குடிநீர் குழாய் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில், அம்ரூத் திட்டம் மூலம் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வீடுகளுக்கு புதிய இணைப்புகள் வழங்கும் வகையில், புதிய குடிநீர் குழாய் அமைப்பதற்காக, பொக்லைன் இயந்திரம் கொண்டு குழிகள் பறிக்கப்பட்டது. பின்னர் குழாய் அமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். பணிகள் முடிந்ததும் மக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வினியோகம் செய்யப்படும்.