மேலும் செய்திகள்
மாவட்டத்தில் 3ம் நாளாக பரவலாக மழைப்பொழிவு
19-Oct-2026
கரூர்:கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, கடந்த, 14ல் தொடங்கியது. இதையொட்டி, பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த, 15 முதல் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால், மானாவாரி நிலங்களில் எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் பணிகளை தொடங்கியுள்ளனர்.கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,ல்) அரவக்குறிச்சி, 3.40, அணைப்பாளையம், 5.20, க.பரமத்தி, 4, குளித்தலை, 2.40, தோகைமலை, 1, கிருஷ்ணராயபுரம், 5, மாயனுார், 2.40, பஞ்சப்பட்டி, 3.60, ஆகிய அளவு களில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும், 27.40 மி.மீ., மழையும், சராசரியாக, 2.28 மி.மீ., மழை பதிவானது.* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 5,695 கன அடி தண்ணீர் வந்தது. அதில், டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடிக்காக வினாடிக்கு, 5,365 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மேலும், கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 430 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
19-Oct-2026