மேலும் செய்திகள்
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
17-Sep-2025
கரூர்: தொடர் மழை மற்றும் கூடுதல் தண்ணீர் வரத்தால், மாயனுார் கத-வணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், கடல் போல் காட்சியளிக்கும் கதவணையை, பொதுமக்கள் ஆர்வ-மாக சென்று பார்க்கின்றனர்.கரூர் மாவட்டம், மாயனுாரில் காவிரியாற்றின் குறுக்கே, 1.5 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், கதவணை கட்டப்பட்டுள்ளது. மேட்டூர் அணை, பவானிசாகர் அணை, அம-ராவதி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் மாயனுார் கதவணையில் தேக்கி வைக்-கப்படுகிறது. பிறகு, மூன்று பாசன வாய்க்கால் மற்றும் காவிரி-யாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவிரியாற்றில் திறக்-கப்படும் தண்ணீர், முக்கொம்பு அணை, கல்லணை மூலம், டெல்டா பாசன மாவட்டங்களுக்கு செல்கிறது.மேட்டூர் அணையில் இருந்து, சம்பா சாகுபடிக்காக காவிரி-யாற்றில் வினாடிக்கு, 18 ஆயிரத்து, 500 கன அடி திறக்கப்பட்-டுள்ளது. இதை தவிர, பவானிசாகர் அணை, நொய்யல் ஆற்று தண்ணீரும் காவிரியாற்றில் கலப்பதால், மாயனுார் கதவணைக்கு வரும் தண்ணீர் அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் வினாடிக்கு, 17 ஆயிரத்து, 668 கன அடி தண்ணீர் மாயனுார் கதவணைக்கு வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 20 ஆயிரத்து, 280 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. சம்பா சாகுபடிக்காக காவிரி-யாற்றில், 18 ஆயிரத்து, 810 கன அடியும், நான்கு பாசன வாய்க்-காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. தொடர் மழை மற்றும் கூடுதல் தண்ணீர் வரத்து காரணமாக, மாயனுார் கதவணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டளை பகுதி வரை கடல் போல் காட்சியளிக்கிறது. அதை கரூர், நாமக்கல், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள், கதவணை சாலை வழியாக சென்று பார்த்து வருகின்றனர்.
17-Sep-2025