சோளம் பயிர் சாகுபடி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்,கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, புதுப்பட்டி, உடையகுளத்துப்பட்டி பகுதிகளில் சிவப்பு சோளம் பயிர் சாகுபடி செய்துள்ளனர். சோளம் பயிர்களுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது கோடை மழை காரணமாக சோளம் பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. கால்நடைகளுக்கு தீவனமாக இப்பயிர் விளங்குகிறது. இப்பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் சிவப்பு சோளம் சாகுபடி நடந்து வருகிறது.