மேலும் செய்திகள்
ராஜ அலங்காரத்தில் வீர ஆஞ்சநேயர்
28-Sep-2024
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்புஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் உடைப்புகரூர், செப். 29-திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதால், கரூரில் நுாதன முறையில் ஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் உடைத்து முறையீடு செய்யப்பட்டது.ஆந்திரா மாநிலம், திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலில், பிரசாதமாக பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுகிறது. அதில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் புகார் தெரிவித்திருந்தார். அந்த புகார், நாடு முழுவதும் உள்ள, பக்தர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன், தேங்காய் உடைத்து, முறையீடு செய்து வழிபாடு நடத்தினர். மாவட்ட இந்து முன்னணி பொருளாளர் ரமேஷ் குமார், கரூர் நகர தலைவர் ஜெயம் கணேஷ் உள்பட, பலர் பங்கேற்றனர்.
28-Sep-2024