உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்

கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்

கரூர், கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது.அதில், கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள், இரவு மற்றும் பகல் நேர கன்ன கனவு குற்றவாளிகள், ரவுடிகள், திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது குறித்து, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்தில், ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்தன், கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், ஜெயராமன், ஈஸ்வரன், ரூபி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகீரா பானு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை