உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தியில் சேதமடைந்துள்ள ஊர் பெயர் வழிகாட்டி போர்டு

க.பரமத்தியில் சேதமடைந்துள்ள ஊர் பெயர் வழிகாட்டி போர்டு

கரூர், ஜன. 4- க.பரமத்தியில் பல இடங்களில், நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள, ஊர் பெயருடன் கூடிய வழிகாட்டி போர்டுகள் சேதமடைந்துள்ளன.கரூர்-கோவை நெடுஞ்சாலையில், க.பரமத்தி உள்ளது. வளர்ந்து வரும் நகரான, க.பரமத்தியில் கல்குவாரிகள் அதிகளவில் உள்ளது. இதனால், க.பரமத்திக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகள் வந்து செல்கின்றன. இதனால், கரூர்-கோவை நெடுஞ்சாலை க.பரமத்தியில் பல இடங்களில், நெடுஞ்சாலை துறை சார்பில், பல்வேறு ஊர்களுக்கு செல்ல வசதியாக, ஊர்பெயருடன் கூடிய வழிகாட்டி போர்டுகள் வைக்கப்பட்டன.இந்நிலையில், பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி போர்டுகளில் இருந்த ஊர்களின் பெயர்கள் அழிந்துள்ளது. மேலும், பல போர்டுகள் உடைந்து தொங்கிய நிலையில் உள்ளது. இதனால், க.பரமத்திக்கு செல்லும் வெளியூரை சேர்ந்த வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, உடைந்த நிலையில் உள்ள வழிகாட்டி போர்டுகளை அகற்றி விட்டு, புதிய போர்டுகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்