உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திண்ணப்பா நகரில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகாலால் ஆபத்து காத்திருப்பு

திண்ணப்பா நகரில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகாலால் ஆபத்து காத்திருப்பு

கரூர்: கரூர்- திருச்சி சாலை திண்ணப்பநகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தான்தோன்றிமலை, கணபதிபா-ளையம், காந்திகிராமம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு திண்-ணப்பாநகர் வழியாக சென்று வருகின்றனர்.இந்நிலையில், திண்ணப்பா நகரின் நுழைவு பாதையோரம் மிக ஆழமான முறையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. மூடப்படாத வடிகாலில், கால்நடைகள் அவ்வப்போது உள்ளே விழுந்து செல்கின்றன. ஆபத்தான நிலையில் வடிகால் திறந்த நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனேயே கடக்கின்றனர்.மேலும், இரவு நேரங்களில் அதிகளவு ஆபத்து காத்திருக்கிறது. எனவே, அனைவரின் நலன் கருதி சிலாப் வைத்து வடிகாலை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி