உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுபாலத்தில் பள்ளம் காத்திருக்கு ஆபத்து

சிறுபாலத்தில் பள்ளம் காத்திருக்கு ஆபத்து

கரூர்: கரூர் அருகே சாலையின் குறுக்கே, சிறுபாலம் கட்டிய இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு செங்குந்தர் நகரில் சாலையின் குறுக்கே, சில மாதங்களுக்கு முன் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது, சிறுபாலத்தில் பள்ளம் ஏற்பட் டுள்ளது. அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது, பள்ளம் மற்றும் இரும்பு கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.குறிப்பாக, இரவு நேரத்தில் சிறுபாலத்தில் செல்வோர் தவறி விழுந்து காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, செங்குந்தர் நகரில் சாலையின் குறுக்கே உள்ள, சிறுபாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை