உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் ஆபத்து

அரவக்குறிச்சியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் ஆபத்து

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், பல்வேறு இடங்களில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.அரவக்குறிச்சியில் அரசு மருத்துவமனை, ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. மருத்துவ கழிவுகளை அந்தந்த மருத்துவமனைகள், தீயிட்டு கொளுத்தி அப்புறப்படுத்தி வருவது வழக்கம். இந்நிலையில், அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில், பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடும், பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல், சாலை ஓரத்திலேயே மர்ம நபர்கள் கொட்டி செல்வதால், வாகன ஓட்டிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மருத்துவ கழிவுகளை கொட்டும் மர்ம நபர்களை கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை, விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என அரவக்குறிச்சி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !