உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆபத்தான வளைவு வேகத்தடை தேவை

ஆபத்தான வளைவு வேகத்தடை தேவை

குளித்தலை:குளித்தலை நகராட்சி, திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில், சண்முகானந்தா தியேட்டர், தனியார் மருத்துவமனை அருகில் ஆபத்தான வளைவு உள்ளது. திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து டூவீலர் மூலம் பொதுமக்கள், தென்கரை பாசன வாய்க்கால் பாலம் வழியாக நகர பகுதிக்கு வருகின்றனர். அதேபோல், பள்ளிவாசல் பகுதியில் இருந்து டூவீலர் மற்றும் கார்கள் சாலையை கடக்கின்றன. இதில், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வாகனங்கள் சென்று வருவதால், அந்த வளைவில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்தை தடுக்கும் வகையில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !