உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார் குளித்தலை, டிச. 25-குளித்தலை அடுத்த சிந்தலவாடி பஞ்., பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாலன், 47; விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் பிரவீனா, 15; புனவாசிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம், பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி, ஜெயபாலன் அளித்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி