உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்கரூர், நவ. 26-வெள்ளியணை அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வெள்ளியணை அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த, முருகேசன் என்பவரது மனைவி ஜோதி லட்சுமி, 35; இவரது கணவர் முருகேசன், சமீபத்தில் தேன் மொழி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால், மனம் உடைந்த ஜோதி லட்சுமி கடந்த, 13ல் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த ஜோதி லட்சுமியின் தாய் காளியம்மாள், 65, போலீசில் புகார் செய்தார்.வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ