உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

குளித்தலை, குளித்தலை அடுத்த நாகனுார் பஞ்., கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகா, 45. இவரது மகள் சினேகா, 23. அதே பகுதியை சேர்ந்த தவமணி என்பவருடன், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 23ம் தேதி காலை, 9:00 மணிக்கு உணவு சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்த சினேகாவை அதன் பின் காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து தாய் கனகா கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை