உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் விடிய, விடிய மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு கரூர், நவ. 17-

மாவட்டத்தில் விடிய, விடிய மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு கரூர், நவ. 17-

மாவட்டத்தில் விடிய, விடிய மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்புகரூர், நவ. 17-கரூர் மாவட்டத்தில், நேற்று காலை விடிய, விடிய மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட து.மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் கடந்த, 15ல் அறிவித்திருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. அந்த மழை நேற்று காலை, 10:00 மணி வரை விட்டு விட்டு பெய்தது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரையுடன் முடிந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,): கரூர், 7.80, அரவக்குறிச்சி, 6, அணைப்பாளையம், 13, க.பரமத்தி, 1.40, குளித்தலை, 5.20, தோகமலை, 3.20, கிருஷ்ணராயபுரம் மற்றும் மாயனுார் தலா, 21, பஞ்சப்பட்டி, 5.40, பாலவிடுதி, 6 மி.மீ., மாவட்டம் முழுவதும் சராசரியாக, 7.50 மி.மீ., மழை பதிவானது.அமராவதி அணைதிருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 484 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 223 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 50 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட் டம், 85.77 அடியாக இருந்தது.மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நே ற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினா டிக்கு, 5,729 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக் காக காவிரியாற்றில், 4,509 கன அடி தண் ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,220 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.* மாயனுார், மணவாசி, கட்டளை, ரெங்கநாதபுரம், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, பஞ்சப்பட்டி, வயலுார் ஆகிய இடங்களில் நேற்று காலை லேசான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ