உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கண்களை கூசும் முகப்பு விளக்குகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

கண்களை கூசும் முகப்பு விளக்குகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

கரூர் : வாகனங்களில் அதிக வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகளால், டூவீலர்களில் செல்பவர்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.கரூரில் இருந்து சேலம், கோவை, மதுரை, திருச்சி ஆகிய தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதில் கனரக வாகனங்களான லாரி, பஸ்கள், கார்கள், ஆம்னி பஸ்கள், 100 கி.மீ.,க்கும் மேல், அதிவேகத்தில் செல்கின்றன. இரவில் இவ்வாறு செல்லும் வாகனங்களில், பெரும்பாலானவை அதிக ஒளி உமிழும் சக்தி வாய்ந்த முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வெளிச்சத்தால், எதிரே பைக்கில் வருபவர்கள், நிலை குலைகின்றனர். இதனால், இச்சாலையில், அடிக்கடி விபத்து நடக்கிறது. பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் இந்த வெளிச்சத்தால் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:அதிக சக்தி வாய்ந்த விளக்குகளை வாகனங்களில் பலர் பொருத்தியுள்ளனர். இவைகள் இரவில் எதிரே வாகனம் ஓட்டி வருபவர்களை தடுமாற செய்யும் வகையில் உள்ளன. நெடுஞ்சாலைகளில், அதிக திறன் கொண்ட விளக்குகளை பொருத்தி செல்லும் வாகனங்களை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ