உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காது கேளாதோர் சங்க மாநாடு

காது கேளாதோர் சங்க மாநாடு

கரூர்:தமிழ்நாடு காதுகேளாதவர், வாய் பேசாதோர் சங்கம், கரூர் மாவட்ட கிளை மாநாடு, மாவட்ட தலைவர் கவின் தலைமையில், சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், அரசு வேலைகளில் காது கேளாதவர், வாய் பேசாதோர்களுக்கு, ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அனைத்து அரசு அலுவலகங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றில், சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், மாநில தலைவர் சொர்ணவேல், மாவட்ட செயலாளர் அரவிந்த், பொருளாளர் பார்த்திபன், மாவட்ட மா.கம்யூ., செயலாளர் ஜோதிபாசு, செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை