உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இறந்து கிடந்த வாலிபர் உடல் இன்று தோண்டி எடுக்க முடிவு

இறந்து கிடந்த வாலிபர் உடல் இன்று தோண்டி எடுக்க முடிவு

கரூர்:க.பரமத்தி அருகே இறந்து கிடந்த, வாலிபரின் உடலை போலீசார் இன்று, தோண்டி எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே காட்டு முன்னுார் பகுதியில் கடந்த, 26ல் முகம் மற்றும் உடலில் காயங்களுடன், 45 வயதுடைய வாலிபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து, க.பரமத்தி வி.ஏ.ஓ., மணிவேல் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, க.பரமத்தி போலீசார் வாலிபர் உடலை கைப்பற்றி, அடையாளம் தெரியாத நபர் என்ற ரீதியில், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்து, கரூர் பாலம்மாள்புரம் மயானத்தில் புதைத்து விட்டனர். இந்நிலையில், தஞ்சாவூரை சேர்ந்த பிரியா, 45, என்பவர், அபுதாபியில் இருந்து கோவைக்கு வந்த தன்னுடைய கணவர் சிகாமணி, 49, வீட்டுக்கு வரவில்லை என, பீளமேடு போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, புகார் அளித்திருந்தார். இதனால், பீளமேடு போலீசார், க.பரமத்தி அருகே, இறந்து கிடந்த வாலிபர் சிகாமணியாக இருக்கக்கூடும் என, நேற்று கரூர் சென்று விசாரணை நடத்தினர்.இதையடுத்து, இன்று கரூர் பாலம்மாள்புரம் மயானத்தில் புதைக்கப்பட்ட, வாலிபர் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பிறகு, இறந்து கிடந்தவர் சிகாமணியா அல்லது வேறு நபரா என தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி