அவதுாறு வீடியோ பெயின்டர் கைது
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலை பஞ்., கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கலைமணி, 53; பெயின்டர். இவர், நேற்று முன்தினம், குளித்தலை தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராமர் குறித்து, வீடியோ வெளியிட்டு குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்த வீடியோ வாட்ஸாப், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து, முன்னாள் எம்.எல்.ஏ., ராமர் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், தொழிலாளி கலைமணியை கைது செய்தனர்.