மேலும் செய்திகள்
3 ரோடுகள் சந்திப்பில் வேகத்தடை அமைக்கணும்!
02-May-2025
அரவக்குறிச்சி, மே 24அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்வதால், காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில், வேகத்தடை அமைக்க வேண்டும்.அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில், காசி விசுவநாதர் ஆலயம் உள்ளது. இக்கோவிலின் அருகிலேயே, கோவிலுார் செல்லும் சந்திப்பு சாலை உள்ளது. இப்பகுதியில் அதிக அளவில் பஸ்கள், லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில், கரூர் சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளதால், பக்தர்கள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
02-May-2025