உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோரிக்கைகளை வலியுறுத்தி மஸ்துார் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மஸ்துார் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர், ஆசாத் சாலையில் உள்ள இ.பி.எப்., அலுவலகம் முன், மாவட்ட பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட துணை செயலாளர் ரவி ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை குறைந்தபட்சம், 3,000லிருந்து, 5,000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஓய்வூதியர்களை சேர்க்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அமைப்பு செயலாளர் மாடசாமி, மாநில செயலாளர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை