உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் மேம்பாட்டுசங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்கரூர், நவ. 5-தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பிரவீணா தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில், இரவு நேரத்தில் காவலர்களை நியமிக்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள், சுற்றுச்சுவர்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், மாவட்ட செவிலியர்கள் மேம்பாட்டு சங்க செயலாளர் தேவி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை