உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மேல்நிலை தொட்டி இயக்குபவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மேல்நிலை தொட்டி இயக்குபவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மேல்நிலை தொட்டி இயக்குபவர்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்கரூர், நவ. 16-தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர், துாய்மை பணியாளர் மற்றும் துாய்மை காவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட துணைத்தலைவர் நகுலப்பன் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், மேல்நிலை தொட்டி இயக்கும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் நிலையான ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களின் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு, வாரிசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் சங்கப் பிள்ளை, மாவட்ட தலைவர் தனலட்சுமி, செயலாளர் செல்வம், பொருளாளர் வீராச்சாமி உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை