மேலும் செய்திகள்
உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
19-Aug-2025
கரூர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) கரூர் கிளை சார்பில், திருமாநிலையூர் போக்குவரத்து பணிமனை முன், மாவட்ட தலைவர் ராஜா முகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த, 2023 முதல் தற்போது வரை, ஓய்வூதிய பணப்பலன்கள், 3,400 கோடி ரூபாயை வழங்க வேண்டும், கடந்த, 2003க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு, பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும், வரவு, செலவு பற்றாக்குறையை சரி செய்ய உரிய நிதியை ஒதுக்க வேண்டும். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட துணைத் தலைவர்கள் ஜீவானந்தம், முருகேசன், செயலாளர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் சரவணன், தண்டபாணி, பாலசுப்பிரமணியன், தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.
19-Aug-2025