கார் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மாவட்ட கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நலச்சங்கம் சார்பில், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், ஆர்.சி., ஸ்மார்ட் கார்டு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆர்.சி., புத்தகத்தின் உரிமையாளர் அனுமதி கொடுத்தால், ஆர்.சி., புக்கை வழங்க வேண்டும். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காலியாக உள்ள, பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆர்.சி., புக்கை தபால் மூலம் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் குமாரதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.