உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர், அக். 30-கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில், தலைவர் கலா தலைமையில், வெண்ணைமலை தொழிலாளர் நலவாரியம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், 5,000 ரூபாய் வழங்க வேண்டும், தொழிலாளர் இணையதளத்தை சீரமைக்க வேண்டும், தொழிலாளர்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ராதிகா, பொதுச்செயலாளர் தங்கவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், செயலாளர் சக்திவேல், பொருளாளர் முனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி