உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்; 40 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்; 40 பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குளித்தலை, காந்தி சிலை முன் நேற்று முன்தினம் சப்-கலெக்டரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி, அனுமதியில்லாமல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், சி.பி.ஐ., (எம்) கிளை செயலாளர் சசிகுமார், இரும்பூதிபட்டி நடராஜன் உள்பட, 40 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை