மேலும் செய்திகள்
பணியாளர்கள் மீது தாக்குதல்
13-Nov-2024
நங்கவரம் பஞ்., பகுதிகளில்டெங்கு கொசு ஒழிப்பு பணி குளித்தலை, நவ. 20-குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில், தொடர்ந்து பெய்த மழையால், பொது மக்களுக்கு தொற்று நோய் வராமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு, 10 பேரும், கொசு மருந்து தெளிப்பான் பணிக்கு நான்கு பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதில், வீடுகள் தோறும் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியும், சிமென்ட் தொட்டி ,லாரி, கார் மற்றும் மாட்டு வண்டி டயர், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பானைகளில் மழைநீர் தேங்கியதை அகற்றிவிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இப்பணிகளை செயல் அலுவலர் காந்தரூபன் ஆய்வு செய்தார். சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன் தலைமையில், பணியாளர்கள் அனைத்து வார்டுகளிலும் சுகாதார பணிகளில் ஈடுபட்டனர்.
13-Nov-2024