உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தோட்டக்கலை பண்ணையில் துணை இயக்குனர் ஆய்வு

தோட்டக்கலை பண்ணையில் துணை இயக்குனர் ஆய்வு

கிருஷ்ணராயபுரம்:முதலைப்பட்டி, அரசு தோட்டக்கலை பண்ணையில், கரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டார்.கரூர் மாவட்டம், முதலைப்பட்டி பகுதியில் அரசு தோட்டக்கலை பண்ணை செயல்படுகிறது. இந்த பண்ணையில் மா, கொய்யா, நெல்லி, மாதுளை ஆகிய பழ மரங்கள், அலங்கார பூச்செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானியத்துடன் விற்பனை நடக்கிறது. இந்த தோட்டக்கலை பண்ணையை கரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தியாகராஜன், நேரில் கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். பண்ணை மேலாளர் பிரேமா, உதவி தோட்டக்கலை அலுவலர் மோகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !