உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரத்தில் கூடு கட்டிய கதண்டுகள் அழிப்பு

மரத்தில் கூடு கட்டிய கதண்டுகள் அழிப்பு

கரூர்: கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே கரைப்பாளையம் கணக்கன் காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 50, விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள, தென்னை மரத்தில் கதண்டுகள் கூடு கட்டியுள்ளன. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். இது குறித்து அளித்த புகார்படி, புகழூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் சம்பந்தப்-பட்ட இடத்துக்கு சென்றனர். பின்னர், மரத்தில் இருந்த கதண்டு-களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அழித்தனர். இதையடுத்து, அப்-பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ