பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
குளித்தலை, குளித்தலை, மாரியம்மன் கோவில் திருவிழா ஐந்து ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. கடந்த, 4ல் அம்மனுக்கு பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. திருத்தேர் நிலைக்கு வந்தவுடன், தயார் நிலையில் இருந்த, 400 பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.