உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கரூர் மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கரூர், கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 11ல் கம்பம் நடுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த, 16ல் பூச்சொரிதல் ஊர்வலம், 18ல் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதை தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது.நேற்று காலை, கரூர் மாநகராட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில், கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. மேலும், பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் இருந்து, ஏராளமான பக்தர்கள் புனித நீர் கொண்டு சென்று, கோவிலில் வைக்கப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி சுவாமியை வழிபட்டனர். புதுமண தம்பதிகள், கரும்பு கட்டிலில் குழந்தைகளை துாக்கி கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !