உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்.,க்குட்பட்ட லட்சுமணம்பட்டி கிராமத்தில் பழமையான பாம்பலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை முதல் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், ஆடு, கோழி பலியிடுதல் ஆகிய நேர்த்திக்கடன் செலுத்தி, சிறப்பு பூஜை செய்தனர். இதில், லட்சுமணம்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், கோவக்குளம், கிருஷ்ணராயபுரம், தாராபுரத்தனுார் மற்றும் கரூர், சேங்கல் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி