உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆடி கிருத்திகையையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்

ஆடி கிருத்திகையையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்

குளித்தலை: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும், 1,000 ஆண்டு பழமையான தேவநாயகி சமேத மத்யார்ஜூனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், உலகில் வேறு எங்கும் காணாத வண்ணம், சுப்பிரமணிய பெருமாள் சிம்ம முத்திரையோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ஆடி கிருத்திகையையொட்டி, நேற்று காலை ராஜேந்திரம் கிராம பொதுமக்கள் சார்பில் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், பால்காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர். பின், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலையில், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பொதுமக்கள் மற்றும் மருதவன குமரன் திருக்கூட்டம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி