வெங்கடரமண சுவாமி கோவிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், நான்காவது சனிக்கிழமையொட்டி, நேற்று ஏராள-மான பக்தர்கள் நீண்ட வரிசையில், காத்திருந்து சுவாமியை வழி-பட்டு தரிசனம் செய்தனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் பிரசித்தி பெற்ற, கல்-யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மஹா கும்பாபிே-ஷகம் காரணமாக நடப்பாண்டு புரட்டாசி திருவிழா நடக்க-வில்லை. இதனால், நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி, திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சி-களும் நடத்தப்படவில்லை.இந்நிலையில், நேற்று நான்காவது சனிக்கிழமையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். அதேபோல், முடி காணிக்கை செலுத்தவும், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மேலும், கோவிலை சுற்றி உள்ள திருமண மண்டபங்களில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால், 100க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.* கோம்புபாளையம், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, பக்தர்கள் குவிந்தனர். மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவி-யங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. பிறகு, ஸ்ரீதேவி பூதேவி உடனான மூலவர் சீனிவாச பெருமாள் சிறப்பு பூக்கள் அலங்கா-ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மஹா தீபாரா-தனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.