காப்பகத்தில் நோயாளி மாயம் போலீசிடம் இயக்குனர் புகார்
குளித்தலை, காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாயமானார்.குளித்தலை அடுத்த, புழுதேரி பஞ்., சீத்தப்பட்டியில் செயல்பட்டு வரும் சாந்திவன மனநல காப்பகத்தில், கர்நாடகா மாநிலம், ஹாசன் என்று முகவரி கூறிய சீனிவாசன் என்பவர் சிகிச்சையில் இருந்து வந்தார். கடந்த, 24ம் தேதி மதியம் 2:00 மணியளவில் சிகிச்சை முழுமை பெறாமல் காப்பகத்திலிருந்து தப்பி சென்றார். பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து காப்பக இயக்குனர் அரசப்பன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, நோயாளியை தேடி வருகின்றனர்.