உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாற்றுத்திறனாளி குழந்தைகளை சுமையாக கருத கூடாது; கரூர் கலெக்டர் பேச்சு

மாற்றுத்திறனாளி குழந்தைகளை சுமையாக கருத கூடாது; கரூர் கலெக்டர் பேச்சு

கரூர், ''மாற்றுத்திறனாளி பெற்றெடுத்த அன்னையர்கள், தங்கள் குழந்தைகளை கூடுதல் சுமையாக நினைக்காமல், கூடுதல் பொறுப்பாக நினைக்க வேண்டும்,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அன்னையர் தின நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:மாற்றுத்திறனாளி பெற்றெடுத்த அன்னையர்கள், தங்கள் குழந்தைகளை கூடுதல் சுமையாக நினைக்காமல், கூடுதல் பொறுப்பாக நினைக்க வேண்டும். தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். உறவுமுறை திருமணத்தை தவிர்க்க வேண்டும். சரியான வயதில் திருமணம் செய்ய வேண்டும். டாக்டர் ஆலோசனைப்படி, உரிய காலத்தில் பிரசவம் மேற்கொள்ள வேண்டும். இவைகளை பின்பற்றினாலே, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பிறப்பை தவிர்த்து விடலாம். மாற்றுத்திறன் குழந்தைகளை சிறப்பு பள்ளியில் சேர்த்து, அன்றாட வாழ்வியல் முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் லோகநாயகி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ