தமிழ் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கல்
குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்-திரை பெருந்திருவிழா தேரோட்டம் கடந்த, 9ல் நடந்தது. சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர், உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோவில் திருவிழாவையொட்டி, தோகைமலை தமிழ்ச்சங்கம் சார்பில், மலை அடிவாரத்தில் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். சங்க நிறுவனர் காந்திராஜன் தொடங்கி வைத்தார். சங்க கவுரவ தலைவர் சந்தீப்குமார் மற்றும் பொறுப்பாளர்கள், பி.ஆர்.பி., கிரானைட்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர். மூன்று நாட்க-ளுக்கு அன்னதானம் நடைபெற்றது.