தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பிரசுரம் வினியோகம்
தகவல் அறியும் உரிமை சட்டம்குறித்து பிரசுரம் வினியோகம்கரூர், அக். 23- கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தின் மாவட்ட துணை மேலாளர் விஜயா தலைமை வகித்தார். ஊழலற்ற, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், குறிப்பிட்ட சில துறைகள் தவிர்த்து, பிற அனைத்து செயல்பாடுகளையும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், 2005ல் தகவல் உரிமை சட்டம் உருவாக்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் இருந்து, தகவல்களை மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்ட இச்சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி யில், துணை தாசில்தார் சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.