கடவூர் யூனியன் தேவர்மலையில் விளையாட்டு உபகரணம் வழங்கல்
குளித்தலை, டிச. 22-கடவூர் யூனியன் பகுதிகளுக்கு உட்பட்ட, 20 பஞ்.,களில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்களை, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமையில் வழங்கப்பட்டது.கடவூர் யூனியன் தேவர்மலை பஞ்.,க்கு வழங்கப்பட்ட கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள், இளைஞர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. பஞ்., தலைவர் நக்கீரன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், பஞ்., செயலாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பஞ்., தலைவர் நக்கீரன் பேசியதாவது:தேவர்மலை பஞ்.,ல், உள்ள மாணவ, மாணவியர் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவதற்காக தமிழக முதல்வர், பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கிராமப்புற ஏழை மாணவ மாணவியர், விளையாட்டு திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, பூப்பந்து, கேரம்போர்டு, செஸ் உள்ளிட்ட 33 வகையான விளையாட்டு உபகரணங்களை தமிழக அரசு அளித்துள்ளது. 83 ஆயிரத்து 250 ரூபாய் மதிப்பீட்டில் தேவர்மலை பஞ்.,க்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது,இவ்வாறு பேசினார்.