மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் தேர்வு ஆக., 20 முதல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர் பணியிட தேர்வு பயிற்சி வகுப்பு வரும், 20 முதல் தொடங்குகிறது.இது குறித்து, கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின், மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர், 2,513 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்பு வரும், 20 முதல் நடத்தப்படவுள்ளது. பயிற்சி வகுப்புகளில் பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறு தேர்வு, வாராந்திர தேர்வு, இணையவழி தேர்வு, முழுமாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள், 2 புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உடனடியாக நேரடியாகவோ அல்லது 04324- 223555 அல்லது 63830 50010 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாகவோ பதிவு செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.