உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

கரூரில் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

கரூர்: கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி பேசினார்.கூட்டத்தில், கவர்னர் கையெழுத்தின்றி உச்சநீதிமன்றமே ஒப்-புதல் அளித்து, சட்டம் இயற்றும் அதிகாரத்தை தனது சட்ட போராட்டம் மூலம் மசோதாவுக்கு ஒப்புதல் பெற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது. தி.மு.க., அரசின் சாதனை-களை விளக்கும் வகையில், மாவட்டத்தில், மாநகர, நகர, ஒன்-றியம் என, 29 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூரில், 40 கோடி மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட், 6.76 கோடி ரூபாய் மதிப்பில், கரூர் காமராஜர் மார்க்கெட் மேம்பாட்டு பணி, கரூர் திருவள்-ளுவர் மைதானத்தில், 6.90 கோடி ரூபாயில் நுாலகம் என பல்-வேறு வளர்ச்சி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரி-யது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, கரூர் மாநகர செயலாளர் கனகராஜ், கரூர் மாநகர பகுதி செயலாளர் கணேசன், ராஜா, குமார், ஜோதி-பாசு, சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !