உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி கூட்டம்: துணை முதல்வர் பங்கேற்பு

மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி கூட்டம்: துணை முதல்வர் பங்கேற்பு

கரூர், கரூர் மாவட்ட, தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கரூரில் நடந்தது.அதில், வரும் சட்டசபை தேர்தலில், இளைஞர் அணியின் பங்கு, திராவிட மாடல் ஆட்சியின் பணிகளை மக்களிடம் கொண்டு செல்வது, மீண்டும் தி.மு.க.,வை ஆட்சி யில் அமர்த்த முதல்வர் ஸ்டாலினுக்கு, இளைஞர் அணி உறுதுணையாக இருப்பது குறித்து, துணை முதல்வரும், தி.மு.க., இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி விளக்கம் அளித்து பேசினார்.கூட்டத்தில், கரூர் மாவட்ட தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் உட னிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி