உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் களை கட்ட தொடங்கியது தீபாவளி புதிய பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம்

கரூரில் களை கட்ட தொடங்கியது தீபாவளி புதிய பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம்

கரூர், தீபாவளி பண்டிகையையொட்டி, கரூரில் தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் விடுமுறை என்பதால், கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.நாடு முழுவதும், ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி வரும், 20ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, பொதுமக்கள் புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பகுதி, கரூர் எம்.எல்.ஏ., அலுவலக சாலை, கவுரிபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஜவுளி வகைகள், காலணிகள், பட்டாசு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதை தவிர ஜவஹர் பஜாரிலும், தற்காலிக கடைகளை வியாபாரிகள் அமைத்துள்ளனர். இதனால், நேற்று காலை, 9:00 மணி முதல் பொது மக்கள் கூட்டம், ஜவஹர் பஜாரிலும் களை கட்டியது. அதேபோல், தீபாவளி பண்டிகை மற்றும் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் வழக்கமான விடுமுறை என்பதால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை