உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தீபாவளி தற்காலிக கடைகள் கட்டண வசூல் மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம்

தீபாவளி தற்காலிக கடைகள் கட்டண வசூல் மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம்

கரூர், அக். 30-தீபாவளி தற்காலிக கடைகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் உரிமை, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.கரூர் மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. மேயர் கவிதா தலைமை வகித்தார். இதில் முதல் தீர்மானமாக, தீபாவளி பண்டிகை காலத்தில் பசுபதீஸ்வரர் கோவில், ஜவஹர்பஜார், பழைய அரசு மருத்துவமனை சாலை, ஆசாத்சாலை ஆசிய பகுதிகளில் சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் படி, கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வழிகாட்டி மதிப்பில், 3 சதவீதம் மாதாந்திர உள்வாடகை தினசரி வாடகை தொகை சதுரடி 1க்கு, மூன்று ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 300 முதல் 400 கடைகள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதில், உச்சபட்ச ஒப்பந்தப்புள்ளி கோரியதை அனுமதிக்கலாம்.இரண்டவது தீர்மானமாக, பணியின் அவரசம் கருதி, மேயரின் முன் அனுமதி பெற்று, பசுபதீஸ்வரர் கோவில், ஜவஹர்பஜார், பழைய அரசு மருத்துவமனை சாலை, ஆசாத்சாலையில் இன்று முதல், நவ., 2 வரை தற்காலிக கடைகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் உரிமம் ஒப்பந்தப் புள்ளி கோரியதில், இரண்டு பேர் மட்டுமே கலந்து கொண்டு உள்ளனர். அதில், உச்சபட்ச ஒப்பந்தப்புள்ளி கோரியவரை அனுமதிக்கலாம்.இந்த தீர்மானங்கள், கூட்டத்தில் வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி