உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அ.தி.மு.க.,வினர் சுவர் விளம்பரம் செய்ய தி.மு.க., கடும் எதிர்ப்பு

அ.தி.மு.க.,வினர் சுவர் விளம்பரம் செய்ய தி.மு.க., கடும் எதிர்ப்பு

கரூர், கரூர் அருகே, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வருகைக்காக, அ.தி.மு.க.,வினர் சுவர் விளம்பரம் செய்ய, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.கரூர் மாவட்டத்தில் வரும், 25, 26ல் அ.தி. மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பிரசாரம் செய்ய உள்ளார். இதனால், அவரை வரவேற்று கரூர் அருகே, திருகாம்புலியூர் ரவுண்டானா பகுதியில், தேசிய நெடுஞ்சாலை சுவற்றில், ஏற்கனவே இருந்த பழைய தி.மு.க., விளம்பரத்தை அழித்து விட்டு, அ.தி.மு.க., சார்பில் நேற்று மதியம் நிர்வாகிகள் விளம்பர செய்ய முயற்சி செய்தனர்.அப்போது, தி.மு.க.,வினர், சுவற்றில் அ.தி.மு.க., விளம்பரம் எழுத கூடாது என, எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் சம்பவ இடத்துக்கு வந்தார். அப்போது, தி.மு.க., வினருக்கும், அ.தி.மு.க., வினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், இருதரப்பினரையும் விலக்கி விட்டார். பிறகு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம், 'தேசிய நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று, சுவர் விளம்பரம் செய்யுங்கள்.ஏற்கனவே உள்ள, சுவர் விளம்பரத்தை அழிக்கக் கூடாது என, இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தெரிவித்தார். அப்போது, இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கும், அ.தி.மு.க., வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், எஸ்.பி., ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு கொடுப்பதாக கூறி விட்டு, அ.தி.மு.க., நிர்வாகிகளை அழைத்து சென்றார். இதனால், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், திருகாம்புலியூர் பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ