உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் ஓட்டுனர்கள் அவதி

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் ஓட்டுனர்கள் அவதி

கரூர், கரூர் மாநகராட்சி பகுதிகளில், பல இடங்களில் பாதாள சாக்கடை சிமென்ட் மூடிகள் உடைந்து, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சி, பழைய கரூர் மற்றும் இனாம் கரூர் நகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்படும் போது, அதை சரி செய்ய வசதியாக வட்ட வடிவில் மேல் பகுதிகளில், துவாரம் விடப்பட்டு, சிமென்ட் மூடிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், கரூர் மாநகராட்சியின் முக்கிய சாலைகளில், பாதாள சாக்கடை மேல் பகுதியில் போடப்பட்டுள்ள, சிமென்ட் மூடிகள் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், வாகனங்களின் டயர்கள் சேதமடைகிறது. இரவு நேரத்தில், டூவீலர்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர்.கடந்த சில நாட்களாக, கரூர் அரசு பழைய மருத்துவமனை சாலை, ராஜாஜி சாலை, கெளரிபுரம், கோவை சாலை மற்றும் ஜவஹர் பஜார் பகுதிகளில் உள்ள, பாதாள சாக்கடை சிமென்ட் மூடிகள் சேதம் அடைந்துள்ளன. தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில், சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை மூடிகளை உடனடியாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ